மணிப்பூரில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியாக எதிர்க்கட்சி எம்.பிக்கள் குழு பேட்டி..!!
இரண்டு நாள் பயணமாக மணிப்பூர் சென்று விட்டு டெல்லி திரும்பிய எதிர்க்கட்சி எம்.பிக்கள் குழு, கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மறுவாழ்வுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மாநில ஆளுநரிடம் வலியுறுத்தியதாகத் தெரிவித்தனர்.
மணிப்பூர் சென்ற 21 எம்.பிக்கள் அடங்கிய குழு, முதற்கட்டமாக அங்கு கலவரத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கியிருந்தவர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தனர்.
தொடர்ந்து தலைநகர் இம்பாலில் ஆளுநர் அனுசுயா உய்கியை சந்தித்த எம்.பிக்கள் குழு, மணிப்பூரில் அமைதி திரும்ப தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரிக்கை மனுவையும் அளித்தனர்.
பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி வந்தடைந்த எம்.பிக்கள், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
மணிப்பூரில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த, பாதிக்கப்பட்ட நபர்களின் மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றத்தை உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என அப்போது அவர்கள் கூறினர்.
Comments