அரசு மருத்துவக் கல்லூரி-மருத்துவமனை முதல்வருக்கு கட்டுக் கட்டாக லஞ்சம்... தீயாய் பரவும் வீடியோ காட்சிகள்...!
தேனி அரசு மருத்துவக் கல்லூரி-மருத்துவமனையில், முதல்வர் மீனாட்சி சுந்தரத்துக்கு, அங்கு கேண்டீன் நடத்தும் மாரிச்சாமி என்பவர் கட்டுக்கட்டாக லஞ்சம் கொடுப்பது போன்று வீடியோ வெளியாகியுள்ளது.
கேண்டீனுக்கு மூன்று குடிநீர் குழாய்கள் இருந்ததாகவும், அவற்றில் இரண்டு துண்டிக்கப்பட்டு விட்டதாகவும், அவற்றை மீண்டும் வழங்க 10 லட்சம் ரூபாய் கேட்டதாகவும் மாரிச்சாமி கூறுகிறார்.
அந்த 10 லட்சத்தில், ஆறரை லட்சம் ரூபாயை கொடுத்தபோது எடுத்த வீடியோதான் இது என்றும் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதை திட்டவட்டமாக மறுத்துள்ள முதல்வர் மீனாட்சி சுந்தரம், கேண்டீனுக்கு கூடுதல் இணைப்புக் கேட்டது உண்மைதான்; ஆனால் குடிநீர் தட்டுப்பாட்டை காரணம் காட்டி, தாம் தர மறுத்துவிட்டதாக கூறியுள்ளார்.
அதனால், பணத்தை எடுத்து வந்து, கட்டாயமாக தன்னிடம் நீட்டி, அதை வீடியோவாகவும் எடுத்து மீனாட்சி சுந்தரம் நாடகமாடுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். தாம் லஞ்சம் வாங்கவில்லை; இதுதொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்து இருக்கிறார்.
Comments