நீங்கள் தரும் பணம் வேண்டாம், எங்கள் வாழ்வாதாரத்தை காக்கும் நிலம் தான் வேண்டும் - என்.எல்.சி. அதிகாரிகளிடம் விவசாயிகள் கதறல்!

0 2347

கடும் எதிர்ப்புக்கு இடையே, நெய்வேலி என்.எல்.சி. அனல் மின் நிலையம் சார்பில் கடலூர் மாவட்டம் வளையமாதேவி கிராமத்தில் கால்வாய் வெட்டும் பணிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

நிலத்தை அளவிட்டுப் பணியை தொடங்கிய என்.எல்.சி. அதிகாரிகளிடம் விவசாயி ஒருவர், தனது நிலத்தை அளவீட நீங்கள் யார் என்று வாக்குவாதம் செய்தார்.

மற்றொரு பெண் விவசாயி ஒருவர், அதிகாரிகளிடம் கண்ணீர் விட்டபடி, நீங்கள் தரும் பணம் வேண்டாம், தங்கள் வாழ்வாதாரத்தை காக்கும் நிலம் தான் வேண்டும் என்று கதறினார்.

விவசாயிகளின் இந்த குமுறல்களைக் கேட்ட அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். என்றாலும், ஜே.சி.பி. உள்ளிட்ட இயந்திரங்களுடன் விளை நிலங்கள் வழியாக, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கால்வாய் வெட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments