சேலத்திற்கு மீண்டும் விமான சேவை.. செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் தொடங்கப்பட வாய்ப்பு : எம்.பி. பார்த்திபன்

0 1484

இன்னும் ஓரிரு மாதங்களில் சேலத்திலிருந்து பெங்களூரு, ஹைதரபாத், கொச்சி ஆகிய நகரங்களுக்கு விமான சேவைகள் தொடங்கப்பட உள்ளதாக சேலம் எம்.பி. பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

காமலாபுரத்தில் நடைபெற்றுவரும் சேலம் விமான நிலைய விரிவாக்க பணிகளை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய பார்த்திபன், அலையன்ஸ் நிறுவனம் பெங்களூரு, சேலம், கொச்சி வழிதடத்திலும், இண்டிகோ நிறுவனம் பெங்களூரு, சேலம், ஹைதரபாத் வழிதடத்திலும் விமான சேவைகளை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும் கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ள சென்னை - சேலம் விமான சேவைகளை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுத்துவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments