குடிபோதையில் காரை ஓட்டி போலீஸ் ரோந்து வாகனம் மீது மோதி குடிக்கவில்லை என்று போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்
சென்னையில் குடிபோதையில் காரை ஓட்டி போக்குவரத்து காவல்துறையின் ரோந்து வாகனத்தை இடித்து தள்ளிய இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் ராயப்பேட்டையை சேர்ந்த ரியாஸ் அகமது என்பவர் குடிபோதையில் மாருதி சுசுகி காரை ஓட்டி சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த போலீசார் தடுத்து நிறுத்த முயற்சித்துள்ளனர்.
ஆனால் ரியாஸ் அகமது காரை வேகமாக இயக்கி, போக்குவரத்து காவல்துறையின் ரோந்து வாகனத்தின் மீது மோதியதில் அவருக்கு மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. மேலும் விசாரணையின் போது தான் குடிக்கவில்லை என்றும் ரியாஸ் அகமது வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
Comments