40 கிமீ வேகத்திற்கு மேல் ஸ்பீடாக சென்றால் அபராதம்.. கோவை காவல்துறைக்கு எதிர்ப்பு..! சென்னையில் நிபுணர்களால் பரிசீலனை

0 14995

போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னையில் வாகன ஓட்டிகள் சாலையில் செல்லும் அதிகப்பட்ச வேகம் கூறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஐஐடி நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் , கோவையில் எந்த ஒரு ஆய்வும் இல்லாமல் ஸ்பீட் ரேடாருடன் கூடிய கேமராக்களை முக்கிய சாலைகளில் பொறுத்தி 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வாகனங்களை ஓட்டிச்செல்லும் உரிமையாளருக்கு இ- செலான் மூலம் அபராதம் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவித்துள்ள கோவை மாநகர காவல்துறைக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

கோவையில் வாகன போக்குவரத்து மிகுந்த அவினாசி சாலை, சத்தி சாலை, பாலக்காடு சாலை ஆகிய மூன்று சாலைகளில் ஸ்பீட் ரேடாருடன் கூடிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த சாலைகளில் 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வாகனங்களை ஓட்டிச்செல்லும் உரிமையாளருக்கு இ- செலான் மூலம் அபராதம் அனுப்பி வைக்கப்படும் முறை வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனை கோவை அவிநாசி சாலையில் மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார் .

கோவை காவல்துறையின் இந்த அறிவிப்புக்கு வாகன ஓட்டிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அவசரமாக பள்ளிக்கூடம் அல்லது விமான நிலையம் சென்றால் 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு செல்ல முடியாது அதன் வேகத்தை அதிகரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்

ஒரு நாளைக்கு 800 ரூபாய் கிடைத்தால் ஏற்கனவே அபராத தொகை என்று 300 ரூபாய் போனால் மீதி தான் கைக்கு கிடைக்கின்றது. இப்போது 40 கிலோ மீட்டருக்கு மேலே போனால் அபராதம் என்றால் நாங்கள் எப்படி பிழைப்பது ? என்கின்றனர் ஓட்டுனர்கள்

இந்த வேகக்கட்டுப்பாடு, எங்களுக்கு பாதிப்பை உண்டாகும் என வாடகை கார் ஓட்டுனர்கள் தெரிவித்துள்ளனர்

எங்களுக்கு கிடைப்பதே குறைந்த வருமானம் என்று கூறும் ஆட்டோ ஓட்டுனர் வாழ்வாதாரம் பாதிக்கும் என்று கூறி யுள்ளனர்

அதே நேரத்தில் இது ஒரு நல்ல செயல்பாடு என்று கூறும் ஆசிரியை, கல்லூரி மாணவர்கள் அபராத தொகை விழுந்து விடும் என்று பயந்து குறைவான வேகத்தில் செல்வார்கள் இது ஒரு நல்ல செயல்பாடு தான் என தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments