1986ம் ஆண்டு மலையேற்றத்தின் போது மாயமான நபரின் உடமைகள் 37 ஆண்டுகளுக்கு பின் மீட்பு...!
சுவிட்சர்லாந்தில் உள்ள மேட்டர்ஹார்ன் மலையில், மலையேற்றத்தின் போது மாயமான ஜெர்மன் நாட்டவரின் எலும்புகள் உள்ளிட்டவை 37 ஆண்டுகளுக்கு பின் மீட்கப்பட்டுள்ளன.
கடந்த 1986ம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த 38 வயது நபர், மலையேற்றத்தின் போது காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஜூலை 12ம் தேதி தியோடுல் பனிப்பாறை வழியாக மலையேறிய நபர்கள், மனித எலும்புகள், கருப்பு நிற ஷூ உள்ளிட்ட உடமைகளையும் கண்டறிந்தனர்.
டி.என்.ஏ பரிசோதனை மூலம் அவை காணாமல் போன ஜெர்மனியைச் சேர்ந்தவரின் எலும்புகள் தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றத்தின் காரணமாக பனிப்பாறைகள் உருகுவதால் பல ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன மலையேறுபவர்களின் எலும்புகள் கண்டுபிடிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments