உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு பாதுகாப்பு சாதனங்களை வழங்குகிறது சீனா - அமெரிக்க உளவுத்துறை
உக்ரைனுக்கு எதிராக போரில் ஈடுபட்டுள்ள ரஷ்யாவுக்கு ராணுவ சாதனங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை சீனா அளித்து வருவதாக அமெரிக்க உளவுத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுடன் அனைத்து வர்த்தக உறவுகளையும் துண்டித்த பிறகு, சீனா அதற்கு முக்கியமான வர்த்தகக் கூட்டாளியாக உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுங்கத்துறை தகவல்களின் அடிப்படையில் ரஷ்யாவுக்கு கடல் பயணத்துக்குரிய சாதனங்கள், ஜாம் செய்யும் தொழில்நுட்ப சாதனங்கள், போர் ஜெட் விமானங்களுக்கான உதிரி பாகங்கள் போன்றவற்றை சீனாவின் அரசு பாதுகாப்பு நிறுவனங்கள் அனுப்பி வருவதாக அந்த உளவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதிலாக சீனாவுக்கு கச்சா எண்ணெயில் விலைத் தள்ளுபடிகளை ரஷ்யா அளித்து வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments