சென்னையில் பிஎஃப்ஐ முன்னாள் மாநில தலைவர் வீட்டில் ED சோதனை

0 2707

பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சென்னையில் அந்த அமைப்பை சேர்ந்த மூன்று பேரின் வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

புரசைவாக்கம் தாக்கூர் தெருவில் உள்ள முன்னாள் மாநிலத் தலைவர் இஸ்மாயில் வீட்டில் நான்கு மணி நேரம் சோதனை நடைபெற்றது. புதிய விடியல் என்ற பத்திரிகை சட்டவிரோத பண பரிமாற்றம், தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக அதன் ஆசிரியரான இப்ராஹிம் அக்ஸரின் பெரியமேடு ஜோதி வெங்கடாசலம் சாலையில் உள்ள வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

மேலும், பத்திரிகை அலுவலகம் இயங்கும் பெரியமேடு பேரக்ஸ் சாலையில் தூரஃப் என்பவருக்கு சொந்தமான இடத்திலும் சோதனை நடைபெற்றது. சோதனை முடிவில் இஸ்மாயிலையும், இப்ராஹிம் அக்ஸரையும் விசாரணைக்காக அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments