மணிப்பூர் விவகாரத்தில் எதிர்ப்பை வெளிப்படுத்த கறுப்பு ஆடையுடன் நாடாளுமன்றம் வந்த எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் கடும் கண்டனம்

0 1506

மணிப்பூர் விவகாரத்தில் எதிர்ப்பை வெளிப்படுத்த கறுப்பு ஆடை அணிந்து நாடாளுமன்றம் வருகை தந்த எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில், வெளியுறவுக் கொள்கை மீதான அறிக்கையை வெளியிட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார். அவரை பேச விடாமல் தடுத்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து பேசிய பியூஷ் கோயல், எதிர்க்கட்சிகளின் கடந்த காலம், நிகழ்காலம், வருங்காலம் என அனைத்தும் இருள் மயமானது தான் என்று கூறினார். எதிர்க்கட்சிகளுக்கு இனி வெளிச்சமே கிடையாது என்றார் அவர். எதிர்க்கட்சிகளின் கருப்பு ஆடை, அவர்களின் கறுப்புச் செயல்களை எடுத்துக் காட்டுவதாகவும் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments