புஞ்சை புளியம்பட்டியில் களைகட்டிய கால்நடை சந்தை... 5 மணி நேரத்தில் ஒரு கோடி ரூபாய்க்கு ஆடு, மாடுகள் விற்பனை
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி கால்நடை சந்தையில் 5 மணி நேரத்தில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கால்நடைகள் விற்பனையாகின.
வாரந்தோறும் வியாழக்கிழமை கூடும் கால்நடை சந்தையில் கறவை மாடுகள், கன்று குட்டிகள், ஆடுகள் என 600க்கும் மேற்பட்ட கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.
அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய சந்தையில் அனைத்து கால்நடைகளும் 5 மணி நேரத்தில் விற்பனையாகின.
கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழையால் மேய்ச்சல் நிலங்களில் புற்கள் அதிகளவில் வளர்ந்து தீவன பிரச்சனைக்கு தீர்வு கிடைத்ததால் கால்நடைகளை வாங்க தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநில வியாபாரிகளும் ஆர்வம் காட்டிவருகின்றனர்.
Comments