பஸ்ஸில் டிக்கெட் எங்க ..? அரசு பேருந்தில் பெண்களிடம் அமைச்சர் சர்ப்ரைஸ் செக்கிங்..!

0 2395

செஞ்சி அருகே அரசு பேருந்தை மறித்து ஏறி, பெண்களிடம் காசு கொடுத்து டிக்கெட் வாங்கினீர்களா ? என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் கேள்வி எழுப்பியதால் பெண் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியத்திற்குட்பட்ட பொன்னான்குப்பம், துத்திப்பட்டு ஆகிய ஊராட்சிகளில் சாலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு சென்று விட்டு காரில் திரும்பிய அமைச்சர் செஞ்சி மஸ்தான் மழவன்தாங்கலிருந்து செஞ்சி பேருந்து நிலையம் சென்ற 1 நம்பர் அரசு பேருந்தை மறித்து திடீரென ஏறி அங்கிருந்த பெண்களிடம் காசு கொடுத்து டிக்கெட் எடுத்தீர்களா ? என்று கேட்டதால் திகிலடைந்த பெண் ஒருவர் இப்பதான் ஏறினேன் என்று சமாளித்தார்.

அந்த பெண்மணியிடம் பேச்சுக்கொடுத்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், எதார்த்தமாக பேசி நலம் விசாரித்தார். டிக்கெட் எடுப்பதில்லை என்ற இளம் பெண்ணிடம் முதல் அமைச்சருக்கு நன்றி சொல்லுங்கள் என்று கூறினார்.

தான் பேருந்தில் ஆய்வு செய்வதை வீடியோவாக பதிவு செய்வதை பார்த்த அமைச்சர் மஸ்தான், படியில் இறங்கி நின்று கொண்டு பேருந்தை இயக்குமாறு ஓட்டுனருக்கு உத்தரவிட்டார்.

இந்த வீடியோ வெளியான நிலையில், கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் பெரும்பாலான அரசு பேருந்துகள் மழை பெய்தால் ஒழுகும் நிலையில் இருப்பதாகவும் அது குறித்தும் அமைச்சர் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments