மூன்லைட்டில் சாப்பிட்டா மூனு நாள் அட்மிட் தான்..! எல்லாமே ஊசிப்போனா எப்படி ? அசைவப் பிரியர்களுக்கு அதிர்ச்சி

0 3374

குற்றாலத்தில் உள்ள ட்ரிசில் (Drizzle) மூன்லைட் உணவகத்தில் கெட்டுபோன இறைச்சியில் உணவு சமைப்பதாக எழுந்த புகாரின் பேரில் ஆய்வு செய்த உணவு பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் சிக்கன், மீன், மட்டன், சோறு, நூடுல்ஸ் என 38 கிலோ கெட்டுப்போன இறைச்சி மற்றும் உணவு பொருட்களை பறிமுதல் செய்து அழித்தனர்.

சிக்கன்... மட்டன்... மீன்... சோறு.. நூடுல்ஸ்... இப்படி எல்லாமே ப்ரிட்ஜுக்குள் வைத்து இருந்தால் எதைத்தான் ப்ரெஷ்சாக சமைத்துக் கொடுப்பீர்கள் என்று கேட்ட அதிகாரியிடம் பதில் சொல்ல இயலாமல் அனைத்தையும் டிரிஷில் மூன் லைட் உணவக ஊழியர்கள் குப்பையில் கொட்டிய காட்சிகள் தான் இவை..!

குற்றாலம் சீசன் களை கட்ட தொடங்கியதோ இல்லையோ, அங்குள்ள உணவகங்களில் ஊசிப்போன பழைய உணவுகளை பதப்படுத்தி சுடவைத்து ப்ரெஷ்சாக கொடுக்கும் சம்பவங்களுக்கு குறைவில்லை.

அந்தவகையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் குற்றாலம்இன், சுவைஉணவகம், நிலாபிரியாணி, இந்தியன் ஹோட்டல் பிரியாணி, சத்தியாஸ் வீட்டு உணவகம் உள்ளிட்ட உணவகங்களில் கிலோ கணக்கில் கெட்டுப்போன இறைச்சி உள்ளிட்ட உணவு பொருட்களை கைப்பற்றி அழித்தனர் உணவு பொருள் பாதுகாப்பு அதிகாரிகள்.

அந்த வகையில் இலஞ்சி சாலையில் உள்ள டிரிஷில் மூன் லைட் உணவகத்தில் பழைய உணவுகளை சுட வைத்து கொடுப்பதாக எழுந்த புகாரின் பேரில் அங்கு உணவுப்பொருள் பாதுகாப்பு அலுவலர் நாக சுப்பிரமணியன் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அங்குள்ள குளிர்பதனப்பெட்டியில் கண்ணாடி கவரால் மூடப்பட்ட சிக்கன், மட்டன், மீன், இறால், சோறு, நூடுல்ஸ் உள்ளிட்ட பழைய உணவு பொருட்களை பதப்படுத்தி வைத்திருப்பதை கண்டுபிடித்தனர்

38 கிலோ எடையுள்ள கெட்டுப்போன உணவுகளை மொத்தமாக குப்பையில் கொட்டிஅதில் பினாயில் ஊற்றி அழித்தனர்

சீசன் வியாபாரம் என்பதால் ஒரு நாள் அதிகமாகவும், மறு நாள் குறைவாகவும் விற்பனை இருக்கும் என்றும் குறைவாக வாடிக்கையாளர் வந்தால், அன்று மீந்து போன உணவு பொருட்களை பதப்படுத்தி வைத்திருந்து மறு நாள் வரும் வாடிக்கையாளர்களுக்கு சமைத்து பரிமாரி வந்ததாக ஓட்டல் நிர்வாகத்தினர் தெரிவித்ததாக அதிகாரிகள் கூறினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments