மக்களவையில் அமளிக்கு இடையே வனப்பாதுகாப்பு மசோதா நிறைவேற்றம்
வனப் பாதுகாப்பு திருத்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஒப்புதலை பெற்ற நிலையில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
மத்திய அரசால் வனம் என அங்கீகரிக்கப்பட்ட பகுதிகளுக்கு மட்டுமே இனி வனப் பாதுகாப்புச் சட்டம் பொருந்தும் என திருத்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் நாட்டின் பசுமைப் பரப்பை அதிகரிக்க முடியும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. வனப்பகுதியில் உயிரியல் பூங்கா, சஃபாரி மற்றும் சூழலியல் சுற்றுலா அமைக்கவும் மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த மசோதா கடந்த மார்ச் 29ந் தேதியன்று அறிமுகம் செய்யப்பட்ட போது, அதன் அம்சங்கள் குறித்து உறுப்பினர்கள் சந்தேகங்களை எழுப்பியிருந்ததால் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில், மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே மசோதா நிறைவேறியது.
Comments