பிரபல நகைக்கடை அதிபர் எடுத்த சோக முடிவால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை

0 4696

ஈரோடு மாவட்டம் கோபிச் செட்டிப்பாளையத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற நகைக்கடை அதிபர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மொடச்சூரைச் சேர்ந்த சேகருக்கு., கோபி, சத்தியமங்கலம், அந்தியூர் உள்ளிட்ட பகுதிகளில் நகைக்கடைகள் உள்ளன. பல நூறு ஏக்கரில் விவசாயமும் செய்து வருகிறார். நேற்று அவரது மகனும், மருமகனும் வெளியூர் சென்று விட்ட நிலையில், வீட்டில் சேகரும் அவரது மனைவி லதா மட்டுமே இருந்துள்ளனர்.

இரவு வழக்கம் போல் சேகர் மாடியில் உள்ள அறையில் தூங்க சென்றுள்ளார். அருகில் இருந்த அறையில் லதா இருந்துள்ளதாக கூறப்படுகிறது. காலை சேகர் இருந்த அறையில் இருந்து துப்பாக்கி சத்தம் கேட்கவே, லதா, சென்று பார்த்தபோது, துப்பாக்கியால் நெற்றியில் சுடப்பட்டு சேகர் உயிருக்கு போராடிய நிலையில் இருப்பது தெரிய வந்ததாக கூறப்படுகிறது.

அக்கம்பக்கத்தினர் உதவியுடன், கோபியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சேகர் அழைத்துச் செல்லப்பட்டார். சில மாதங்களுக்கு முன் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட சேகருக்கு ஒரு கையும் ஒரு காலும் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டதாகவும், அதனால், அவர் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படும் நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments