இடிந்து விழும் அபாயத்தில் குடிசை மாற்று வாரிய வீடுகளை பார்வையிடச் சென்ற தி.மு.க. மாநகராட்சி கவுன்சிலர் மற்றும் தி.மு.க. வட்டச் செயலாளர் இடையே மோதல்..!
சென்னை தியாகராயநகரில் சேதமடைந்த குடிசை மாற்று வாரிய வீடுகளை பார்வையிடச் சென்ற தி.மு.க. மாநகராட்சி கவுன்சிலர் மற்றும் தி.மு.க. வட்டச் செயலாளர் ஆதரவாளர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
ராமகாமத்துபுரம் பகுதியில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு 500 வீடுகள் கட்டப்பட்டு அதில் மக்கள் வசித்து வருகின்றனர். இதில், ஓ பிளாக்கில் உள்ள ஒரு வீட்டில் பால்கனி இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இதனை பார்வையிடுவதற்காக வட்ட செயலாளர் விஷ்ணு என்பவர் மாநகராட்சி அதிகாரிகளை அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
இதனையறிந்த அப்பகுதி கவுன்சிலர் பிரேமா தனது கணவர் சுரேஷ் உடன் அங்குச் சென்றுள்ளார். அப்போது இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தள்ளுமுள்ளாக மாறியதில், கவுன்சிலரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதிகாரப்போட்டியில் இருவரும் ஈடுபட்டு வருவதால் தங்களின் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லையென அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
Comments