டி.எம்.கே. ஃபைல்ஸ் 2 வீடியோ.. வெளியிட்டார் அண்ணாமலை..!!

0 20973

தி.மு.க. ஃபைல்ஸ் பாகம் -2 என்ற பெயரிலான ஆவணங்களை பா.ஜ.க. தமிழகத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.

சென்னையில் ராஜ் பவனில் ஆளுநர் ஆர்.என். ரவியை அண்ணாமலை நேரில் சந்தித்து ஆவணங்கள் அடங்கிய பெரிய டிரங்க் பெட்டி ஒன்றை வழங்கினார்.

முறைகேடுகள் தொடர்பாக ஆளுநர் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டதாக ட்வீட் ஒன்றின் மூலம் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, 16 நிமிடம் 16 விநாடி நேரம் ஓடும் தி.மு.க. ஃபைல்ஸ் பாகம் -2 காணொளி ஒன்றையும் அண்ணாமலை வெளியிட்டார்.

இ.டி.எல். உள்கட்டமைப்புச் சேவைகள் லிமிட்டட் நிறுவனத்தின் மூலம் மூவாயிரம் கோடி ரூபாய்க்கும் போக்குவரத்துத் துறையில் 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் டி.என்.எம்.எஸ்.சி. நிறுவனத்தில் 600 கோடி ரூபாய்க்கும் ஊழல் நடந்திருப்பதாக தெரிவித்துள்ள அண்ணாமலை, தாம் மேற்கொள்ளும் நடைபயணத்தின் போது பொதுமக்களுக்கு இது தொடர்பாக விளக்கிக் கூறப்படும் என்றும் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments