கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றதன் 24-ஆம் ஆண்டு தினம்.. திராஸ் போர் நினைவிடத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அஞ்சலி.. !!
கார்கில் போரின் 24-ம் ஆண்டு வெற்றி தினத்தையொட்டி, லடாக்கின் திராஸ் பகுதியில் உள்ள போர் நினைவிடத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் கார்கில் போரில் வீர மரணம் அடைந்த வீரர்களின் நினைவாக லடாக்கில் கட்டப்பட்டுள்ள 'ஹட் ஆஃப் ரிமெம்பரன்ஸ்' என்ற அருங்காட்சியகத்தையும் அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட்டார்.
முப்படை தலைமை தளபதி அனில் சவுகான், ராணுவ தளபதி மனோஜ் பாண்டே, கடற்படை தளபதி ஹரி குமார், விமானப்படை தளபதி விஆர் சவுத்ரி உள்ளிட்டோர் திராஸ் போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
கார்கில் போர் நினைவிடத்திற்கு மேல் பறந்து, நான்கு மிக்-29 ரக போர் விமானங்கள் அஞ்சலி செலுத்திய நிலையில், சீட்டல் ராணுவ ஹெலிகாப்டர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தின.
திராஸில் உள்ள போர் நினைவிடத்தில் ராணுவ வீரர்கள் மெழுகுவர்த்திகள் ஏற்றி அஞ்சலி செலுத்தினர். லடாக் சாரணர்கள் இசைக்குழு, தேஷ் மேரே பாடலை பாடி கார்கில் போரில் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு மரியாதை செலத்தினர்.
Comments