மீண்டும் சீன வெளியுறவுத்துறை அமைச்சரானார் வாங் யீ.. 7 மாதங்கள் மட்டுமே அமைச்சராக இருந்த கின்கேங் நீக்கம்.. !!
சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக 7 மாதங்கள் மட்டுமே பணியாற்றிய கின் கேங் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
சீன நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் மீண்டும் வாங் யீ வெளியுறவுத்துறை அமைச்சராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
கின் கேங் எந்த பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார் என்ற அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. கின் கேங் நீக்கத்துக்கு உடல்நலம் மற்றும் அரசியல் காரணங்களை சிலர் மேற்கோள் காட்டியுள்ளனர்.
ஆனால் அவரது பதவி நீக்கத்துக்கான காரணங்கள் இன்னும் தெளிவாக தெரியவில்லை. கடந்த ஆண்டு பொலிட்பீரோவுக்கு பதவி உயர்வு பெற்ற வாங் யி , கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய வெளியுறவு ஆணையத்தின் தலைவராக இருந்தார். தற்போது அவர் மீண்டும் வெளியுறவுத்துறை அமைச்சராகி உள்ளார்.
Comments