குடும்பம் நடுத்தெருவில் நிற்கிறது.... ஓலா, உபருக்கு, எதிராக ஆட்டோ ஓட்டுனர்கள் ஆவேசம்...!

0 7259

சென்னையில் ரேபிடோ, ஓலா, உபர் பைக் டாக்ஸியால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக ஓலா மற்றும் உபர் ஆட்டோ ஓட்டுனர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்

சென்னையில் ரேபிட்டோ, ஓலா, உபர் பைக் டாக்ஸியால் தங்களில் தினசரி வருவாய் குறைந்து கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவித்து ஓலா, உபர் ஆட்டோ ஓட்டுனர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்

சென்னையில் ஓலா, உபர், என்னைக்கு கால் எடுத்து வச்சதோ அன்னிலேருந்து நாங்க ஏழைங்கதான் என்று தங்கள் குடும்பம் எல்லாம் நடுத்தெருவில் நிற்பதாக வேதனை தெரிவித்தார்

ஒன்றே கால் லட்சம் ரூபாய் செலவு செய்து ஆட்டோவை எடுத்து ஓட்டும் தங்களை, சவாரிக்கு அழைக்கும் வாடிக்கையாளர் வீடு தேடிச்சென்றால் அதற்குள்ளாக தங்களை கேன்சல் செய்து விட்டதாக கூறி பைக் டாக்ஸியில் ஏறிச்சென்று விடுகின்றனர் என்று கூறிய ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறினார்

தான் ஆட்டோ மட்டும் ஓட்டாமல் சமையல் வேலைக்கு சென்று வருவதாகவும் ஓலா , உபர் வருமானத்தை சுரண்டுவதாக தெரிவித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments