புதிய மாதிரி பாடத்திட்டம் நடப்பு கல்வியாண்டில் நடைமுறைக்கு வரும் - உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி
புதிய மாதிரி பாடத்திட்டம் 2023-24 கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,மாணவர்களுக்கு உதவிடும் வகையிலும், உயர்கல்வி நிறுவனங்களுக்கிடையே இடமாறுதல் கோரும் மாணவர்களுக்கு பயன்படும் வகையிலும் இந்த மாதிரி பாடத்திட்டம் மறுசீரமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இளநிலை பட்டப்படிகளில் 5 பாடப்பிரிவுகள் இடம்பெறும் என்றும், இந்தப் புதிய மாதிரி பாடத்திட்டத்தால் பல்கலை மற்றும் தன்னாட்சி கல்லூரிகளுக்கு பாதிப்பு ஏற்படாது என்றும் ஆசிரியர்களின் பணிநிலையில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பு மற்றும் பணிச்சுமை போன்றவற்றில் ஆசிரியர்களுக்கு உதவும் வகையில் புதிய மாதிரி பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments