பாலின மாற்று அறுவை சிகிச்சைக்குத் தடை விதித்து ரஷ்ய நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றம் - அதிபர் புடின் ஒப்புதல்.. !!
ரஷ்யாவில் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு தடை விதிக்கும் சட்ட மசோதாவிற்கு அதிபர் விளாடிமிர் புடின் ஒப்புதல் அளித்துள்ளார்.
பாலினத்தை மாற்றிக்கொள்வது போன்ற மேற்கத்திய சிந்தனைகள் ரஷ்ய பாரம்பரியத்திற்கு எதிராக உள்ளதாக கருதி அதற்கு தடை விதித்து அந்நாட்டு மேலவையிலும், கீழவையிலும் ஒருமனதாக சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஏற்கனவே பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களின் திருமண அங்கீகாரம் ரத்து செய்யப்படுவதுடன், மூன்றாம் பாலினத்தவர்கள் குழந்தைகளை தத்தெடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது மூன்றாம் பாலினத்தவரை மனவிரக்திக்கு உள்ளாக்கி தற்கொலைக்குத் தூண்டக்கூடும் என மனித உரிமை ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.
Comments