தனது மனைவியுடன் தகாத உறவில் ஈடுபட்ட அண்ணனை தாக்கி கொலை செய்த தம்பி

0 8715

ஏற்காடு அருகே மனைவியுடன் தொடர்பில் இருந்த அண்ணனை கொலை செய்து விட்டு காட்டெருமை தாக்கி விட்டதாக நாடகமாடிய தம்பி கைது செய்யப்பட்டார்.

கொம்மக்காட்டைச் சேர்ந்த வினோத், காட்டெருமை முட்டி தலையில் காயம் அடைந்ததாகக் கூறி ஞாயிறன்று சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். போலீஸார் நடத்திய விசாரணையில், வினோத்தை அவரது தம்பி விவேக் கல்லால் தலையில் தாக்கி கொலை செய்தது தெரிய வந்ததால் விவேக்கை கைது செய்தனர்.

தொடர் விசாரணையில், அண்ணன் காதலித்து வந்த பெண்ணை தம்பி 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்ததும், திருமணத்திற்கு பிறகும் அவர்கள் காதலை தொடர்ந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து அண்ணனை தம்பி கண்டித்த போது ஏற்பட்ட தகராறில் கொலை நடந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments