பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் மேம்பாலம் தடுப்பு சுவர்மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து... இரண்டு கொள்ளையர்கள் உயிரிழப்பு

0 1918

பொள்ளாச்சி - பாலக்காடு சாலையில் மேம்பால தடுப்பு சுவர் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த நிலையில், அவர்கள் செயின்பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்கள் என தெரியவந்துள்ளது.

திங்கட்கிழமை இரவு என்ஜிஎம் கல்லூரி அருகே உள்ள மேம்பாலப்பகுதியில் அதிவேகமாக வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து விபத்து நேர்ந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அன்று காலை கடைவீதிப் பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின்பறிப்பில் ஈடுபட்டு தப்பிய இரண்டு பேர் விபத்தில் சிக்கியது தெரிய வந்துள்ளது.

அதில் ஒருவர் பெயர் சஞ்சய்குமார் என்பதும், அவர் மீது செயின்பறிப்பு உள்ளிட்ட பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பதாகவும், மற்றொருவர் யார் என விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

விபத்து நடந்த பகுதியில் இரண்டு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், மற்றொரு வாகனத்தில் வந்தவர்கள் இவர்களது கூட்டாளிகளாக இருக்கலாம் எனவும், விபத்து நடந்ததும் தப்பி ஓடியிருக்கலாம் என கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments