இம்ரான்கானை கைது செய்து இன்று ஆஜர்படுத்த பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் உத்தரவு

0 1458
இம்ரான்கானை கைது செய்து இன்று ஆஜர்படுத்த பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் உத்தரவு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை இன்றே கைது செய்து ஆஜர்படுத்துமாறு போலீசாருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் குறித்து அவதூறாக பேசியதாக இம்ரான் கான் உள்ளிட்ட தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி நிர்வாகிகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் தேர்தல் ஆணையத்தின் முன்பு இம்ரான் கான் ஆஜராகவில்லை. இந்நிலையில் இம்ரான் கானை கைது செய்து தேர்தல் ஆணையத்தின் முன் இன்று ஆஜர்படுத்துமாறு இஸ்லாமாபாத் போலீஸ் ஐ.ஜி.க்கு தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments