மகாராஷ்டிராவுக்கு அடுத்த முதல்வர் அஜித் பவார்?
மகாராஷ்டிராவின் முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டேவுக்கு பதிலாக அஜித் பவார் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறிய காங்கிரஸ் கருத்தை பாஜக நிராகரித்துள்ளது.
அடுத்த மாதம் அஜித் பவார் முதலமைச்சராக நியமிக்கப்படுவார் என காங்கிரஸ் மூத்த தலைவர் பிரித்விராஜ் சவான் கூறியிருந்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், அஜித் பவார் முதலமைச்சராக நியமிக்கப்பட வாய்ப்பில்லை என்றும், இது தொடர்பாக கூட்டணியில் சேரும்போதே அவரிடம் தெளிவாக தெரிவித்து விட்டதாகவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய தேவேந்திர ஃபட்னாவிஸ், ஆகஸ்ட் மாதம் மகாராஷ்டிர அமைச்சரவையில் விரிவாக்கம் இருக்கும் என்றும் கூறினார்.
Comments