ரீல்ஸ் செய்வதற்கு ஆசைப்பட்டு தென்னை மரத்தில் ஆட்டம் போட்ட இளைஞர்கள்... மரம் முறிந்து ஆற்றில் விழுந்ததில் காயம்
கேரளாவில் ரீல்ஸ் செய்வதற்கு ஆசைப்பட்டு உடம்பைப் புண்ணாக்கிக் கொண்ட இளைஞர்களின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மலப்புறம் மாவட்டத்திற்கு உட்பட்ட காளி காவு பகுதியில் இளைஞர்கள் சிலர் ரீல்ஸ் செய்வதற்கு ஆசைப்பட்டு, வளைந்திருந்த தென்னை மரத்தின் மீது வரிசையாக அமர்ந்திருந்தனர்.
இதில் கடைசியாக அமர்ந்திருந்த நபர், மரத்தை ஆட்டுவிப்பதற்காக லேசாக அசைத்தார். அடுத்த சில நொடிகளில் எதிர்பாராதவிதமாக தென்னை மரம் முறிந்து விழுந்தது.
கணநேரத்தில் மரத்தின் மீதிருந்த அனைத்து இளைஞர்களும் தண்ணீருக்குள் விழுந்தனர். தண்ணீர் என்பதால் விழுந்த இளைஞர்கள் சிறு சிறு காயங்களுடன் தப்பினர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டு வருகிறது.
Comments