மணிப்பூரில் 2 பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டதால் இதர சமூகத்தினர் கோபம்... மிசோரமில் வசிக்கும் மெய்தி இன மக்கள் முன்னெச்சரிக்கையாக வெளியேற்றம்...!
மணிப்பூரில் இரு சமூகத்தினர் இடையே மோதல் தொடரும் நிலையில், பணி நிமித்தமாக அண்டை மாநிலமான மிசோரமில் வசிக்கும் மெய்தி சமூக மக்கள் முன்னெச்சரிக்கையாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
மிசோராம் தலைநகர் ஐஸ்வோலில் வசிக்கும் மெய்தி சமூகத்தினர் மீது இதர சமூகத்தினர் கோபத்தில் உள்ளதே இதற்குக் காரணம்.
மணிப்பூரில் இரண்டு பெண்களை, மானபங்கப் படுத்தியவர்கள் மீதான ஆத்திரம், இவர்கள் மீது திரும்பும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
எனவே மெய்தி சமூகத்தினர், ஐஸ்வோலை விட்டு வெளியேறுமாறு முன்னாள் மிசோ தீவிரவாதக் குழுவினர் கேட்டுக் கொண்டனர்.
அதன்பேரில் மிசோரமில் இருந்து மாணவர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் சாரை-சாரையாக மணிப்பூர் அரசே ஏற்பாடு செய்த சிறப்பு விமானங்கள் மூலம் வெளியேறி வருகின்றனர்.
Comments