நீதிமன்றங்களில் மகாத்மா காந்தி, திருவள்ளுவரின் உருவப் படங்களை தவிர மற்ற தலைவர்களின் படங்களை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் சுற்றறிக்கை

0 1453

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நீதிமன்றங்களில் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவரின் உருவப் படங்களை தவிர மற்ற தலைவர்களின் படங்களை நீக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

கடந்த காலங்களில் நடந்த மோதல்கள் மற்றும் சட்ட ஒழுங்குப் பிரச்சினைகளை தடுக்கும் விதமாக இந்த முடிவு, உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

அதன்படி சென்னை ஆலந்தூரில் கட்டப்பட்டுள்ள புதிய நீதிமன்ற வளாகத்தில் நுழைவு வாயிலில் உள்ள அம்பேத்கர் படத்தையும் நீக்குமாறு வழக்கறிஞர்களை வலியுறுத்துமாறு காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதிக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments