சோதனை சாவடியில் 100 ரூபாய் லஞ்சம் கேட்டு தகராறு.... பேசிக் கொண்டிருந்த போதே லாரி ஓட்டுநரை கழுத்தைப் பிடித்து தள்ளிய வனத்துறை அதிகாரி....!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் இரவில் சென்ற லாரி ஓட்டுநரை பிடித்து வனத் துறையினர் தாக்கியதாகக் கூறி, சரக்கு லாரி ஓட்டுநர்கள் ஒன்றிணைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அந்த சாலையில் இரவில் வாகனங்கள் பயணிக்க தடை உள்ளது. இதை மீறி, லஞ்சம் பெற்றுக் கொண்டு சரக்கு வாகனங்கள் அனுமதிக்கப் படுவதாக கூறப்படுகிறது.
அதன்படி கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சரக்கு லாரி ஓட்டுநரிடம் நூறு ரூபாய் கேட்டபோது, வாக்குவாதம் ஏற்பட்டு, அவர் வன ஊழியர்களால் தாக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
வாக்குவாதத்தின்போது லாரி ஓட்டுநர் ஒருவரை வன ஊழியர் கழுத்தைப் பிடித்து தள்ளியதாக தெரிகிறது. தற்போது இந்த வீடியோ வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே லாரி ஓட்டுநர்களின் கோரிக்கையாக உள்ளது.
Comments