நம்பர் பிளேட் இல்லாத இருசக்கர வாகனத்தில், ஹெல்மட் அணிந்து வந்து செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது....!
சென்னையில் நம்பர் பிளேட் இல்லாத இருசக்கர வாகனத்தில், ஹெல்மட் அணிந்து வந்து செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவரை, 22 கிலோமீட்டர் தூரம் வரை சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து போலீசார் கைது செய்தனர்.
கடந்த 14ஆம் தேதி சைதாப்பேட்டையில் சாலையில் நடந்து சென்ற பள்ளி ஆசிரியை அணிந்திருந்த 5 சவரன் செயினை இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் பறித்துச் சென்றனர்.
இருவரும் ஹெல்மெட் அணிந்திருந்ததுடன், வாகனத்தில் நம்பர் பிளேட்டும் இல்லாததால் அவர்களை அடையாளம் காண்பதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டது.
சைதாப்பேட்டையிலிருந்து மாதவரம் வரை 22 கிலோமீட்டர் தொலைவிற்கு அவர்கள் இருசக்கர வாகனத்தில் சென்றதை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் உறுதி செய்த போலீசார், மாதவரம், கொடுங்கையூர் பகுதி மக்களிடம் சிசிடிவி காட்சிகளை காண்பித்து செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவரையும் அடையாளம் கண்டு கைது செய்தனர்.
அவர்களில் பாலாஜி என்பவன் மீது கொலை வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. மது அருந்துவதற்காக செயின் பறிப்பில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.
Comments