எஞ்சிய ஆட்சிக் காலத்திலாவது தி.மு.க. அரசு நல்லது செய்யும் என நம்புகிறேன் - அண்ணாமலை
திமுக ஆட்சிக்கு வந்து 27 மாதங்கள் ஆகியும் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று குற்றம்சாட்டியுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, எஞ்சிய ஆட்சிக் காலத்திலாவது மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.
தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சென்னை காரப்பாக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய அண்ணாமலை, வாக்குறுதி அளித்தபடி தமிழகத்தில் தடுப்பணைகள் கட்ட ஒரு செங்கலை கூட தி.மு.க. அரசு வைக்கவில்லை என குற்றஞ்சாட்டினார்.
பின்னர் பேட்டியளித்த அவர், இந்தியாவில் எங்கும் இல்லாத வகையில் 26 மாதங்களில் 3 முறை தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக விமர்சித்தார்.
மணிப்பூரில் என்ன நடக்கிறது என தெரியாமலேயே முதலமைச்சர் ஸ்டாலின் பேசுவதாகவும், அம்மாநில விளையாட்டு வீரர்களுக்கு எப்படி பயிற்சி அளிப்பது என்பது மத்திய அரசுக்கு தெரியும் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.
மேலும், பிரிவினைவாதம் பேசியவர்கள் ஒன்றாக இணைந்து ''இந்தியா'' என கூட்டணிக்கு பெயர் வைத்துள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
Comments