இந்தியாவின் அதிநவீன ஏவுகணைத் தாங்கி போர்க்கப்பல் வியட்நாமிடம் ஒப்படைப்பு

0 15112

இந்திய கடற்படையின் அதி நவீன போர்க்கப்பலான கிர்ப்பன்  வியட்நாமில் உள்ள கேம் ரேம்  நகரில் அந்நாட்டு கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆயிரத்து 450 டன் எடையுள்ள ஏவுகணை தாங்கிக் கப்பலான கிர்ப்பன் நீண்ட காலமாக இந்தியக் கடற்படை சேவையில் உள்ளது.இந்தோ பசிபிக் கடல்பகுதியில் சீனாவின் ஆக்ரமிப்பை கருத்தில் கொண்டு வியட்நாமுக்கு இந்தியா இந்தக் கப்பலை அளித்துள்ளது.

இந்தியாவின் இந்தோ பசிபிக் கொள்கையில் வியட்நாம் முக்கியமான ஒரு நட்பு நாடாக உள்ளது என்று இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கடற்படைத் தளபதி அட்மிரல் ஹரி குமார் தெரிவித்தார்.எந்த ஒரு தனி நாடும் தனது சுயநலத்துக்காக இந்தோ பசிபிக்கை ஆக்ரமிப்பு செய்ய முடியாது என்றும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments