மேகதாது திட்டத்தால் 13 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி பாதிக்கப்படலாம் என கணக்கீடு.. !!
மேகதாது திட்டத்திற்கு 13 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி நிலம் தேவைப்படுவதுடன், சுமார் 10 ஆயிரம் மரங்கள் வெட்டப்படலாம் என்றும், ஏராளமான வனவிலங்குகள் பாதிக்கப்படலாம் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
எனவே, மேகதாது திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தற்போதுவரை ஒப்புதல் அளிக்காமல் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மரங்கள் வெட்டப்படாமல், வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் மேகதாது திட்டத்தை செயல்படுத்த, எல்லைப் பகுதியில் வேறு ஏதேனும் இடம் உள்ளதா என ஆராய 29 வனத்துறை அதிகாரிகளை பணி நியமனம் செய்து கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
Comments