அமெரிக்க கடற்படையின் தலைமைத் தளபதியாக லிசா ஃபிரான்செட்டி நியமனம்..!

0 1597

அமெரிக்கக் கடற்படைத் தளபதியாக அட்மிரல் லிசா ஃபிரான்செட்டியை, அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

அவரது நியமனம் அமலுக்கு வரும் பட்சத்தில், அட்மிரல் பதவியை வகிக்கும் முதல் பெண் என்ற வரலாற்றுப் பெருமையைப் பெறுவார் லிசா. ஃபிரான்செட்டியின் நியமனம் அமெரிக்க ராணுவத்தில் பாலின பிரதிநிதித்துவத்திற்காக குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்படைத் தளபதி அட்மிரல் மைக் கில்டேயின் நான்கு ஆண்டு பதவிக்காலம் முடிவடையும் நிலையில், அடுத்த இடத்தில் உள்ள லிசாவின் நியமனத்திற்கு செனட் சபை ஒப்புதல் அளிக்குமா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. கடற்படையில் வழிகாட்டும் ஏவுகணைகள் மற்றும் போர்க்கப்பல்களை இயக்குதல் ஆகியவற்றில் லிசா திறம்பட பணியாற்றி உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments