இந்திய மொழிகளை ஒரு விருப்பமான பயிற்று மொழியாக கற்பிக்குமாறு பள்ளிகளுக்கு அறிவுறுத்திய சிபிஎஸ்இ

0 1451

இந்திய மொழிகளை ஒரு விருப்பமான பயிற்று மொழியாக கற்பிக்குமாறு பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது.

தேசிய கல்விக் கொள்கையின் பரிந்துரைகளை உயர் கல்வித்துறை செயல்படுத்தத் தொடங்கியுள்ள நிலையில், பன்மொழிக் கற்பித்தலுக்கு பள்ளிகள் அடித்தளம் அமைக்க வேண்டும் என்று கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பிய கடிதத்தில்  சிபிஎஸ்இ இயக்குநர் ஜோசப் இம்மானுவேல் வலியுறுத்தியுள்ளார்.

முன்தொடக்க வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை இந்திய மொழியை விருப்பமாகப் பயன்படுத்துமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.22 மொழிகளில் பாடப்புத்தகங்களைத் தயாரிக்க கல்வி அமைச்சகம் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலுக்கு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது . 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments