பெற்றோரின் கவனக்குறைவு.. முதல் மாடியிலிருந்து தவறி விழுந்து 4 வயது சிறுவன் உயிரிழப்பு.. !!
சென்னை, திருவல்லிக்கேணியில் வீட்டின் பால்கனியில், சிறிய நாற்காலியைப் போட்டு ஏறி தெருவை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த 4 வயது சிறுவன், நாற்காலி சறுக்கியதில், முதல் மாடியில் இருந்து கீழே தவறி விழுந்து உயிரிழந்தான்.
பள்ளப்பன் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், முதல் தளத்தில் வசிக்கும் செந்தமிழ், லட்சுமி தம்பதிக்கு லித்தீஷ், லித்திக் ஆகிய இரட்டை குழந்தை உள்ளனர்.
இன்று காலை, இரட்டையர்களில் ஒருவனான லித்திக் தூங்கிக் கொண்டிருந்த நிலையில், மற்றொரு சிறுவனான லித்திஷ், பால்கனியில் சிறிய நாற்காலியை எடுத்து வந்து போட்டு அதில் ஏறி கிரில் கம்பியை பிடித்துக் கொண்டு, தெருவில் போவோர், வருவோரை வேடிக்கை பார்த்து கொண்டிருந்துள்ளான்.
அப்போது, பிளாஸ்டிக் நாற்காலி சறுக்கியதாக கூறப்படும் நிலையில், முதல் தளத்தில் இருந்து கீழே தவறி விழுந்த சிறுவன் படுகாயம் அடைந்தான். தெருவில் நடந்து சென்றவர்கள் குழந்தையை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பின்னரே, பெற்றோருக்கு தகவல் தெரியவந்துள்ளது.
வீட்டுக்குள் வேலையாக இருந்த பெற்றோரின் கவனக்குறைவால், பால்கனியில் இருந்து தவறிவிழுந்த சிறுவன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து ஐஸ்அவுஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments