இந்தியாவின் யூ.பி.ஐ.யை இலங்கையில் பயன்படுத்த ஒப்பந்தம் - பிரதமர்

0 1518

இந்தியாவின் யூ.பி.ஐ. பணப்பரிவர்த்தனையை இலங்கையில் பயன்படுத்த வகை செய்வது, நாகையில் இருந்து காங்கேசன்துறைக்கு பயணிகள் படகுப் போக்குவரத்தை தொடங்குவது உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கு இடையே கையெழுத்தாகி உள்ளன...

டெல்லி வந்த இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதில் இரு நாடுகளுக்கு இடையே 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

இதன் பின் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது, இந்தியாவின் யூ.பி.ஐ. பணப்பரிவர்த்தனையை இலங்கையில் பயன்படுத்த வகை செய்வதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் மேம்படும் என்று பிரதமர் மோடி கூறினார்.

நாகையில் இருந்து காங்கேசன்துறைக்கு பயணிகள் படகுச் சேவை ஆரம்பிப்பததும் வர்த்தக உறவுகளுக்கு வலுசேர்க்கும் என்று அவர் தெரிவித்தார். இலங்கையுடனான விமானப் போக்குவரத்து அதிகரிக்கப்படும் என்று கூறிய பிரதமர், இலங்கைத் தமிழரின் நலன் காக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார். அதன் பின்னர் பேசிய ரணில் விக்ரமசிங்கே, பொருளாதார நெருக்கடி காலத்தில் இந்தியா வழங்கிய உதவிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments