விரட்டி விரட்டி காவலரை தாக்கி, பாக்ஸிங் போட்ட கஞ்சாகுடிக்கி சிறுவன்..! போலீஸ் அடியால் அடங்கினான்

0 4363

சென்னை கொளத்தூரில் கஞ்சா மற்றும் மதுவுக்கு அடிமையான 17 வயது போதை சிறுவன் ஒருவன் காவலரை ஓட ஓட விரட்டிச்சென்று பாக்ஸர் போல தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரே ஒரு காவலரை மட்டும் குறிவைத்து விரட்டி விரட்டி பாக்ஸிங் போட்ட கஞ்சா குடிக்கி சிறுவன் இவர் தான்..!

கொளத்தூர் ஜிகேஎம் காலனி பகுதியில் நேற்று மதுப்போதையில் இருந்த சிறுவன் அட்டகாசத்தில் ஈடுப்படுவதாக பொதுமக்கள் அளித்த தகவலின் படி கொளத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அந்த வாலிபரை அப்புறப்படுத்த நினைத்தனர். படுத்துக் கொண்டு எழுந்திருக்க மறுத்து அடம் பிடித்த அவனை அலேக்காக தூக்க முயன்ற போது ஒரு காவலரின் கையை கடித்து வைத்தான்

கையை உதறிக்கொண்டே விலகிச்சென்ற அவர் மீண்டும் வந்து கால்களை பிடித்த போது அவரை எட்டி உதைப்பது போல துள்ளி எழுந்த அவன், அவரது நெஞ்சில் ஓங்கிக் குத்தினான். அருகில் இருந்த காவலர் அந்த போதை சிறுவனை மடக்கிப்பிடித்தார்

அதன் பின்னரும் அடங்காத அந்த கஞ்சா குடிக்கி தான் ஏற்கனவே தாக்கிய காவலரை பாக்ஸர் போல சைகை காண்பித்து தொடர்ந்து தாக்க எத்தனித்தான். அருகில் நின்ற காவலர் தனது கால்களை குறுக்கே விட்டு அவனை தடுத்த போது உதை பட்ட பந்து போல கீழே விழுந்தான்

இருந்தும் அடங்காத அந்த போதை சிறுவனுக்கு உடம்பில் உறைக்கும் வகையில் போலீசார் திருப்பிக் கொடுத்ததும் அவன் பொத்தென்று கீழே விழுந்தான்.

அவனை போலீஸ் வாகனத்தில் ஏற்றிச்செல்ல முயன்ற போது அங்கு நின்ற ஒருவரின் கால்களை கெட்டியாக பிடித்துக் கொண்டு எழுந்திருக்க மறுத்தான்.

அவனது பாட்டியிடம் நடத்திய விசாரணையில் 10 வகுப்பு வரை படித்த நிலையில், அவனது அம்மாவை பிரிந்ததால் கஞ்சா மற்றும் மது போதைக்கு அடிமையானது தெரியவந்தது. உள்ளூர் இளைஞர்களின் உதவியுடன் அவனை கைகால்களை பிடித்து தூக்கிச்சென்று அவனை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவனுக்கு உளவியில் ரீதியாக சிகிச்சை அளிக்க இருப்பதாக தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments