MLA சார், மோர் வேண்டாம்.. ஒரு கிலோ தக்காளி கொடுங்க.. ஆளுக்கு 50 ரூபாய் தர்ரேன்..! அரைகிலோ கூட கிடைக்காதே..

0 1667

திருவள்ளூர் அடுத்த சோழவரம் அருகே 100 நாள் வேலை செய்து கொண்டிருந்த பெண்களை சந்தித்து தாகத்துக்கு மோர் தருவதாக கூறிய எம்.எல்.ஏ மாதவரம் சுதர்சனத்திடம் ஆளுக்கு ஒரு கிலோ தக்காளி தருமாறு பெண்கள் கேட்ட நிலையில், தக்காளிக்கு பதில் ஆளுக்கு 50 ரூபாய் தருவதாக சமாளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார் எம்.எல்.ஏ சுதர்சனம்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சோழவரம் ஊராட்சிக்கு உட்பட்ட சோத்து பெரும்பேடு என்ற கிராமத்தில் 100 நாள் வேலை செய்து கொண்டிருந்த பெண்களை பார்ப்பதற்காக மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் சென்றார். அவர்களிடம் பேச்சுக் கொடுத்த சுதர்சனம் மோர் தருவதாக கூறினார். கூட்டத்தில் ஒரு பெண்மணி மோர் வேண்டாம் ஒரு கிலோ தக்காளி தாருங்கள் என்று கேட்டார் அதற்கு ஐம்பது ரூபாய் தருகிறேன் அதில் வாங்கிக் கொள்ளுங்கள் என்று சுதர்சனம் கூற 50 ரூபாய்க்கு அரை கிலோ தக்காளி கூட வராது ... எப்படி வாங்குவது என்று திருப்பி கேட்டனர்.

எம்.எல்.ஏ கொடுத்த மோரை குடித்த படியே சில பெண்கள் நீங்கள் கொடுக்கும் ஐம்பது ரூபாய் வைத்து என்ன செய்வது? தங்கள் பகுதியில் சாலை வசதி இல்லை, முழங்கால் அளவுக்கு மழை நீர் தேங்குது, கால்வாய் வசதில் இல்லை என்று குறைகளை அடுக்கிக்கொண்டே சென்றனர்

தனது உதவியாளரிடம், அவர்களது குறைகளை குறித்து வைக்க சொன்னார் எம்.எல்.ஏ. சுதர்சனம். சிலர் தங்கள் பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டிய லேப்டாப் மற்றும் சைக்கிள் மற்றும் பெண்களுக்கான திருமண உதவி ஆகியவை நிறுத்தப்பட்டுள்ளது என்று பட்டியலிட ஆரம்பித்தனர்

ஒரு சில பெண்கள் இந்த 50 ரூபாய் எங்களுக்கு எதற்கு என்று கேள்வி எழுப்பியதோடு , 100 நாள் வேலை செய்ததற்கு அடுத்த வாரம் 1500 ரூபாய் கிடைக்கும், அது போதும் என்றனர்.

நான் கிளம்புகிறேன் என்று சொன்ன சட்டமன்ற உறுப்பினரை பார்த்து தாராளமாக போங்க... இதற்கு அப்புறம் ஓட்டு கேட்க மட்டும் வாங்க என்று கூறிச்சென்றனர் இந்தப் பெண்கள்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments