பணியில் இருந்த காவலரை தாக்கி மூக்கை உடைத்த 3பேர் கைது..!
சென்னையை அடுத்த பல்லாவரத்தில் பணியில் இருந்த காவலரை தாக்கி மூக்கை உடைத்த 3பேர் கைது செய்யப்பட்டனர்.
செயின்ட் தாமஸ் மவுண்ட்டைச் சேர்ந்த வீரசெல்வம் என்பவர் பல்லாவரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணி புரிந்து வருகிறார். கண்டோன்மென்ட் பல்லாவரம், பொன்னியம்மன் கோயில் தெருவில் அவர் இரவு பணியை மேற்கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த 3பேர் அவரை இடிப்பது போல் வேகமாக வந்ததாக கூறப்படுகிறது.
இதில் நிலைதடுமாறிய வீரசெல்வம் கீழே விழாமல் இருப்பதற்காக அவர்களின் இருசக்கர வாகனத்தின் கைப்பிடியை கையால் பிடித்து நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 3பேரும் வீரசெல்வத்தின் மீது தாக்குதல் நடத்தியதில் அவரது மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் 3பேரையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் 3பேரும் கஞ்சா போதையில் இந்த செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது.
Comments