ஓசியில் புரோட்டா கேட்டு ஓட்டல் ஓனர் மண்டையை உடைத்த திமுக பிரமுகர் ..! இங்கேயும் சிக்க வைத்தது சிசிடிவி

0 6849

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் ஓசியில் புரோட்டா கேட்டு ஓட்டலில் ரகளை செய்த திமுக பிரமுகர் ஒருவர், ஆதரவாளருடன் சென்று ஓட்டல் உரிமையாளரின் மண்டையை உடைத்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் சரவணன் என்பவர் முனீஸ்வரன் செட்டி நாடு உணவகம் என்ற பெயரில் ஓட்டல் நடத்தி வருகின்றார்.

சம்பவத்தன்று இவரது கடைக்கு திமுக வார்டு பிரதிநிதி ஆசைதம்பி என்பவர் முதலில் 100 ரூபாய்க்கு புரோட்டா வாங்கி விட்டு பணம் கொடுக்காமல் சென்றுள்ளார்.

பின்னர் சிறிது நேரம் கழித்து வந்த ஆசை தம்பி, தனக்கு மீண்டும் ஓசியில் புரோட்டா கேட்ட போது , சரவணன் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகின்றது.

இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதால் அங்கிருந்த பிளாஸ்டிக் நாற்காலியை எடுத்து சரவணனை , ஆசை தம்பியும் அவருடன் வந்த ஆட்டோ ஓட்டுனர் சிவராஜும் தாக்கி உள்ளனர் 

ஒரு கட்டத்தில் கருங்கல் ஒன்றை எடுத்து சரவணன் மற்றும் சதீஷ் ஆகியோரின் மண்டையை உடைத்தார் ஆசைத்தம்பி

சிசிடிவி ஆட்சிகளை ஆதாரமாக வைத்து ஆசைதம்பியையும் , அவருக்கு ஆதரவாக தாக்குதலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுனரையும் போலீசார் கைது செய்தனர்

அதே போல சேலம் அம்மாப்பேட்டை மிலிட்டரி ரவுண்டானா பகுதியில் உள்ள சின்னப்பையன் என்ற ஓட்டலுக்கு மது போதையில் சென்று சாப்பிட்ட இரு காவலர்கள் சாப்பிட்டதற்கு பணம் கொடுக்காமல் ஓட்டல் மேஜையில் 2 மணி நேரத்துக்கும் மேலாக படுத்து உறங்கி உள்ளனர். அவர்களை எழுப்பி விட்டதால் வெளியே வந்து வாசலில் நின்று ஓட்டல் உரிமையாளரை அடிக்க பாய்ந்தனர்

அதில் ஒரு காவலர் தன்னை அயோக்கியன் என்று கூறிக் கொண்டு ஓட்டல் உரிமையாளரை சண்டைக்கு அழைத்தார். 

இந்த வீடியோ வைரலான நிலையில் மறு நாள் காலை சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் , போதையில் வம்பிழுத்த போலீசாரின் விவரங்களை கேட்டுச்சென்றதாக  ஓட்டல் உரிமையாளர் தெரிவித்தார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments