பேருந்து நிறுத்தத்தில் பெண்களிடம் சில்மிஷம்.. பொதுமக்கள் துரத்தியதால் தப்பியோடி கால்வாயில் விழுந்த இளைஞர்.. !!

0 1736

சென்னை வேளச்சேரியில் பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட இளைஞர், பொதுமக்கள் விரட்டியதால் தப்பியோடி, கால்வாயில் விழுந்து சிக்கிக் கொண்டார்.

கைவேலி என்ற இடத்தில் கால்வாய் சேற்றில் ஒருவர் சிக்கியிருப்பதாக நள்ளிரவில் கிடைத்த தகவலின் பேரில் வேளச்சேரி தீயணைப்புத் துறையினர், விரைந்து சென்று கயிறு கட்டி மீட்டனர்.

விசாரணையில், அவர் பீகாரைச் சேர்ந்த பிரேம் தேவ் என்பதும், ஆதம்பாக்கத்தில் உள்ள ஒரு டிபன் சென்டரில் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வருவதும் தெரிய வந்தது.

நேற்றிரவு கைவேலி பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டு பெண்களை சில்மிஷம் செய்ததாகவும், அப்போது அங்கிருந்தவர்கள் சுற்றிவளைக்க முயன்றபோது தப்பியோடி, கால்வாயில் விழுந்ததும் தெரிந்தது. இதனையடுத்து பிரேம் தேவ் வேளச்சேரி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments