மகாராஷ்ட்ராவில் பலத்த மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

0 1593

மகாராஷ்ட்ராவில் பலத்த மழை பெய்து வருவதையொட்டி மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மும்பையின் பல்வேறு பகுதிகளில் முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

கிங்சர்க்கிள், சயான் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் அதிகளவில் தேங்கியதால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. பல இடங்களில் இடுப்பளவு தண்ணீரில் மக்கள் நடந்து சென்றனர். 

பலத்த மழை காரணமாக இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மின்சார ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டதால் ரயில்நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. 

இதனிடையே, மகாராஷ்டிராவில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மும்பை, தானே, ரெய்கார், பால்கர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments