ChatGPT-க்கு போட்டியாக மெட்டா உருவாக்கியுள்ள புதிய AI.. !!

0 3523

Facebook இன் தாய் நிறுவனமான மெட்டா, ChatGPT-க்கு போட்டியாக லாமா-2 என்ற செயற்கை நுண்ணறிவு அமைப்பை உருவாக்கியுள்ளது.

ஆராய்ச்சி மற்றும் வணிக பயன்பாட்டிற்கு இலவசமாக பயன்படுத்தும் வகையில் மைக்ரோசாப்ட் உடன் கூட்டு சேர்ந்து லாமா-2 உருவாக்கப்பட்டுள்ளதாக மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

இதனை குறிக்கும் வகையில் மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லாவுடன் இருவரும் ஒரே மாதிரியான நீல நிற உடையணிந்து போஸ் கொடுக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் ஜூக்கர்பெர்க் பதிவிட்டுள்ளார்.

லாமா-2 அடுத்த தலைமுறைக்கான ஆராய்ச்சி மற்றும் வணிக பயன்பாட்டிற்கு உதவும் எனவும், இதைச் செய்த சத்யா மற்றும் தங்கள் அணிக்கு நன்றி எனவும் ஜுக்கர்பெர்க் பதிவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments