பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்படுகிறதா..? வெளியானது முக்கிய தகவல்
பாகிஸ்தான் நாடாளுமன்றம் ஆகஸ்ட் 8ம் தேதி கலைக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 12ம் தேதியோடு முடிவுக்கு வருகிறது. தேர்தலுக்கு முன்பாக தற்போதைய நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்றும், ஆகஸ்ட் 8-ம் தேதி நாடாளுமன்றத்தைக் கலைக்க நாட்டின் மிக முக்கிய கட்சிகளான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியும், பாகிஸ்தான் மக்கள் கட்சியும் ஒப்புக்கொண்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தைக் கலைக்கும் தேதி இன்னும் முடிவாகவில்லை. உரிய ஆலோசனைக்குப் பிறகு அதிகாரப்பூர்வமாக அரசு தனது முடிவை அறிவிக்கும் என பாகிஸ்தான் தகவல் தொடர்பு அமைச்சர் மரியம் அவுரங்கசீப் தெரிவித்துள்ளார்.
Comments