6 மணி நேர விசாரணை முடிந்து வீட்டுக்குப் புறப்பட்டார் பொன்முடி
அமலாக்கத்துறையினர் நடத்திய 6 மணி நேர விசாரணை முடிந்து அமைச்சர் பொன்முடி வீட்டுக்குப் புறப்பட்டார்
எம்.பி. கவுதம சிகாமணியும் விசாரணை முடிந்து அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பினார்
சம்மனை ஏற்று மாலை 4 மணிக்கு அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார் அமைச்சர் பொன்முடி
அமைச்சர் பொன்முடியிடம் இன்றுடன் விசாரணை முடிந்ததாக தி.மு.க. வழக்கறிஞர் சரவணன் தகவல்
இனி அடுத்த சம்மன் வந்தால் மட்டுமே அமைச்சர் பொன்முடி அமலாக்கத்துறை முன் ஆஜராக வேண்டும் - வழக்கறிஞர் சரவணன்
சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் 6 மணி நேரமாக விசாரணை நடந்து முடிந்தது
முதல் நாளான நேற்று இரவு 8 மணி வாக்கில் தொடங்கிய விசாரணை அதிகாலை 3 மணி வரை நீடித்தது
பொன்முடியிடம் நேற்று 7 மணி நேரம் விசாரணையும் இன்று 6 மணி நேரம் விசாரணையும் நடத்தினர் அமலாக்கத்துறையினர்
இரண்டு நாட்களில் மொத்தம் 13 மணி நேரம் பொன்முடியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர்
அமைச்சர் பொன்முடியிடம் இன்றைய விசாரணையின் போது 100 கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல்
Comments