நாட்டின் வளர்ச்சிக்கு இளம் பட்டதாரிகளின் பங்களிப்பு அவசியம்... பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழு தலைவர் கருத்து
இந்தியாவை உலகின் தலைசிறந்த நாடாக மாற்றுவதற்கு இளம் பட்டதாரிகள் சமூக அக்கறையுடன் செயல்படவேண்டும் என பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு தலைவர் பிபேக் தெப்ராய் தெரிவித்துள்ளார்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 29 ஆவது பட்டமளிப்பு விழா தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு தலைவர் பிபேக் தெப்ராய் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது, மேலை நாடுகளில் பல்கலைகழகங்கள் உருவாவதற்கு முன்பே இந்தியாவில் நாலந்தா, தக்சசீலா போன்ற இடங்களில் பல்கலைகழகங்கள் இருந்ததாக தெரிவித்தார்.
ஆங்கிலேய ஆதிக்க காலத்தில் இந்தியா இருந்தபோது ஆசியாவிலேயே முதல் பெண் பட்டதாரியாக காதம்பரி என்பவர் விளங்கியதாக அவர் தெரிவித்தார்.
Comments