எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு I.N.D.I.A என பெயர் சூட்டியுள்ளதாக மல்லிகார்ஜுன கார்கே அறிவிப்பு
எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு I.N.D.I.A என பெயர் சூட்டியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்துள்ளார்.
பெங்களூருவில் 2ஆம் நாளாக எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து ஆலோசனை மேற்கொண்டனர். நாடாளுமன்ற தேர்தல் வியூகங்கள் தொடர்பாக இரு நாட்களாக 26 எதிர்கட்சிகள் ஆலோசனை நடத்தினர்.
கூட்டத்திற்கு பிறகு எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய கார்கே, Indian National Developmental Inclusive Alliance என எதிர்க்கட்சிகளின் கூட்டணி அழைக்கப்படும் என்றார்.
கூட்டணியை வழிநடத்த 11 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்படும் என்றும் மும்பையில் நடைபெறும் அடுத்த கூட்டத்தில் தொகுதி பங்கீடு, பிரச்சாரம் குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் பேசிய ராகுல் காந்தி, பா.ஜ.க.வின் சித்தாந்தத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராடி வருவதாகவும், ஆக்கப்பூர்வமாகவும், சுமூகமாகவும் பெங்களூரு கூட்டம் நடந்து முடிந்ததாகவும் கூறியுள்ளார்.
Comments