காலையிலேயே மது விற்பனை குறித்த அமைச்சரின் விளக்கம் கண்டு வருத்தம் - அண்ணாமலை

0 2489

காலையிலேயே ஏன் மது விற்பனை செய்ய வேண்டும் என்ற ஆய்வுக்கு, அமைச்சர் முத்துசாமி கொடுத்த விளக்கம் கண்டு மிகுந்த வருத்தப்படுவதாக தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், தூய்மைப் பணியாளர்கள், கைகளால் சாக்கடைக் கழிவுகளை அகற்றும் நிலையை மாற்ற, மாற்று வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டுமே தவிர, அதற்கான தீர்வு காலையில் மது விற்பது அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.

குடும்பத்தில் ஒரு தூய்மைப் பணியாளருக்கு 40 ஆயிரம் ரூபாய், தூய்மைப் பணியாளர் குடும்பத்தினர் திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்காக இண்டு வருடங்களுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய், சுய தொழில் தொடங்க ஐந்து லட்சம் ரூபாய் வரை மானியம், மருத்துவக் காப்பீடு, தூய்மைப் பணியாளர் மரணங்களைத் தடுக்க நமஸ்தே திட்டம்  என பல திட்டங்களைத் தீட்டி, மத்திய அரசு பெருமளவில் நிதி ஒதுக்கி வருவதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் திட்டங்களை இதுவரை தமிழக அரசு பயன்படுத்தாமல் இருப்பதாகத் தெரிவித்துள்ள அண்ணாமலை, தமிழக அரசு, சாராய விற்பனையைப் பெருக்குவதில் கவனத்தைச் செலுத்தாமல், மத்திய அரசின் தூய்மைப் பணியாளர்களுக்கான நலத் திட்டங்களை அவர்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments